Viral Video: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் பிப். 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் என பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா முழுவதும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் போட்டி, மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் நகரில் நடைபெற இருப்பதையொட்டி, இந்திய வீரர்கள் அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு ஹோட்டல் வரவேற்பின்போது, பணிப்பெண்கள் அவர்களின் நெற்றியில் திலகமிட முயன்றனர். அப்போது, சிராஜ், உம்ரான் மாலிக், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் அந்த திலகத்தை தவிர்க்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, வீரர்கள் மீது நெட்டிசன்கள் குற்றச்சாட்டு வைக்க தொடங்கிவிட்டனர்.


மேலும் படிக்க | Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து


இந்திய வீரர்கள் இப்படி செய்திருக்கக் கூடாது என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். திலகமிடுவது என்பது இந்தியாவில் இந்து முறைப்படி, விருந்தினர்களை வரவேற்பதற்காக மேற்கொள்ளப்படும் சடங்கு. இதனை தவிர்த்ததாக கூறி, சிராஜ், உம்ரான் மாலிக்கை மட்டும் இணையத்தில் பலரும் தாக்கி வருகின்றனர். ஆனால், அதேபோன்று, அதே வீடியோவில் விக்ரம் ரத்தோர் உள்பட நிர்வாகத்தினர் சிலரும் திலமிடுவதை தவிர்ப்பதனை குற்றஞ்சாட்டுபவர்கள் கண்டுகொள்ளவில்லை. 



வர இருக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் உம்ரான் மாலிக் கிடையாது. மேலும், அவர் தற்போது இந்திய அணியுடன் இல்லை என்பதால், இந்த வீடியோ பழையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது, சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த இலங்கை அல்லது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போது நடந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜ் பங்கேற்க இருக்கிறார். மேலும், முழு தொடரிலும் இந்தியாவிற்கு முக்கியமான வீரராக இருப்பார். முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா குறைந்தபட்சம் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு குறைவு என்பதால் சிராஜ், முகமது ஷமி போன்றவர்கள் வேகப்பந்துவீச்சை முன்னின்று கவனிக்கும் கூடுதல் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கு சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றனர். 


சிராஜ் மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, சுற்றுப்பயணத்தில் பல்வேறு காயங்களால் இந்திய அணி, தொடர்ந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை இழக்கும் போதெல்லாம், சிராஜ் எவ்வளவு அற்புதமாக பந்து வீசினார் என்பதை இந்திய ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாது.


மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ