Ind Vs SL: ‘மாஸ்க்’ அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில், இந்தியா 536 ரன்கள் எடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது!
டெல்லியில் கடந்த சில நாட்களாக பனிமூட்டத்தில் கலந்து கரும் புகை காணப்படுகிறது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன.
இந்நிலையில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் பீல்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்துள்ளனர்.
இதனால் போட்டி சுமார் 16 நிமிடம் தாமதமானது. பின் சிறிது நேரத்தில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து போட்டியில் விளையாடினர்.