வாழ்த்து செய்தியால் வந்த வினை - நெட்டிசனிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட கங்குலி
இந்திய கால்பந்துவீரர் சுனில் சேத்திரிக்கு வாழ்த்து தெரிவித்த செய்தியில் சவுரவ் கங்குலி நெட்டிசனிடம் மொக்கை வாங்கியுள்ளார்.
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி டிவீட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆசிய கோப்பைக்காக தகுதி பெற்ற இந்திய கால்பந்து அணியை வாழ்த்திய அவர், தவறான நபர் ஒருவரை டேக் செய்ததால் சர்ச்சைக்குள்ளானார். சுனில் சேத்திரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி, ஆசியக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டது. இதில் வெற்றி பெற்று ஆசியக்கோப்பைக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இதற்காக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் படிக்க | Ishan kishan: ஐசிசி ரேங்கிங்கில் சாதனை படைத்த இஷான் கிஷன்
அந்த வாழ்த்துச் செய்தியில் "சுனில் சேத்திரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி ஆசியக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது. இதன்மூலம் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள இந்திய கால்பந்துஅணிக்கு வாழ்த்துகள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றிருக்கிறீர்கள்" எனக் கூறி, சுனில் சேத்ரியை டேக் செய்திருந்தார்.
ஆனால், சுனில் சேத்ரியை டேக் செய்யாமல், நேபாளத்தைச் சேர்ந்த மற்றொருவரை டேக் செய்துவிட்டார். தவறுதலாக கங்குலி டேக் செய்திருந்த அந்த நபர் உடனடியாக கங்குலிக்கு ரிப்ளை கொடுத்தார். அந்த டிவிட்டில் 'ஹாய் சவுரவ், நான் நேபாளத்தைச் சேர்ந்த சுனில். நான் உங்கள் கேப்டன் சுனில் சேத்ரி அல்ல. உங்கள் ட்வீட்டைச் சரிபார்க்கவும்" என கூறினார். இதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் கங்குலி பழைய ட்வீட்டை நீக்கிவிட்டு புதிய ட்வீட்டை செய்ய வேண்டியிருந்தது. சுனில் சேத்ரியின் தலைமையில் இந்திய அணி பாலஸ்தீனத்தை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றின் அடுத்த போட்டியில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | Team India IND vs SA: டிராவிட் கொடுத்த அட்வைஸ் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR