முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கயானாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிஹார்டியன் 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஆம்லா 35, குயின்டன் டி காக் 18, ரோஸவ் 7, டி வில்லியர்ஸ் 22, டுமினி 13, பார்னல் 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல், ஹஸல்வுட், நாதன் கவுல்டர் நைல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 


190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரம்பத்திலே விக்கெட்கள் மளமளவென சரிந்தன. ஆனால் ஆரோன் பின்ச் நிலைத்து நின்று விளையாடினார். டேவிட் வார்னர் 1, உஸ்மான் கவாஜா 2, ஸ்டீவ் ஸ்மித் 8, மேக்ஸ்வெல் 3, மிட்செல் மார்ஷ் 8, மேத்யூ வேட் 2, நாதன் கவுல்டர் நைல் 0, ஆடம் ஸம்பா 0 ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். 22.5 ஓவரில் 90 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் பின்ச், நாதன் லயனுடன் இணைந்து நிதானமாக ஆடினார்கள். ஆரோன் பின்ச் 72 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து நாதன் லயனையும் 30 ரன்னில் ஆட்டம் இழக்க 34.2 ஓவரில் ஆஸ்திரேலியா 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3, பார்னல், இம்ரன் தாகிர், பாங்கிஸோ தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 


ஆட்ட நாயகனாக பிஹார் டியன் தேர்வானார்.