பங்களாதேசை 84 ரன்களுக்கு சுருட்டிய தென் ஆப்பிரிக்கா! அபார வெற்றி!
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர் 12ல் குரூப் Bயில் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டி விளையாடியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பம் முதலே பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. தென்ஆப்பிரிக்க அணியின் வேகத்தில் பங்களாதேஷ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நைம் 9, சௌமியா சர்க்கார் 0, முஷ்பிகுர் ரஹீம் 0, மஹ்முதுல்லாஹ் 3, அஃபிஃப் ஹொசைன் 0 என பரிதாபமாக பெவிலியன் திரும்பினர். பங்களாதேஷ் அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா மற்றும் நார்ட்ஜே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மிகவும் சொற்ப இலக்கை விரட்டிய தென்ஆப்பிரிக்கா அணி 13.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது. தேம்பா பாவுமா 31 ரங்களுடனும், டேவிட் மில்லர் 5 ரங்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
ALSO READ இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கியதற்கான காரணம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR