பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியை கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) அறிவித்துள்ளது, அதில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை.  காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ரம், ராஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், பிரிட்டோரியஸ் மற்றும் குயின்டன் டி காக் போன்ற பல தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் விளையாட உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/Quinton-de-Kock.jpg


மேலும் படிக்க | IPL2022: மும்பையைவிட அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருக்கும் அணிகள்


10 அணிகள் பங்கேற்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 போட்டிகள் மார்ச் 26 முதல் தொடங்க உள்ளது, மேலும் லீக் கட்டத்தின் அனைத்து ஆட்டங்களும் மகாராஷ்டிராவில் வான்கடே ஸ்டேடியம், டை பாட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் உள்ளிட்ட 4 வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.  இந்தியன் பிரீமியர் லீக் 2022 நடைபெறும் அதே சமயத்தில், தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.   ஆனாலும், தென் ஆப்பிரிக்கா வீரர்கள் ஐபிஎல்-ல் விளையாட உள்ளனர்.  



வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:
டீன் எல்கர், டெம்பா பவுமா டேரின் டுபாவில்லன், சரேல் எர்வீ, சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ், வியான் முல்டர், டுவான் ஆலிவியர், கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கெல்டன், லூத்தோ சிபம்லா, க்ளென்டன் ஸ்டூர்மேன், கைல் வெர்ரைன், லிசாட் ஸாட் வில்லியம்ஸ்,


போட்டிகள் விவரம்:


1வது ஒருநாள் போட்டி: மார்ச் 18 - சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்


2வது ஒருநாள் போட்டி: மார்ச் 20 - வாண்டரர்ஸ், ஜோகன்னஸ்பர்க்


3வது ஒருநாள் போட்டி: மார்ச் 23 - சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்


1வது டெஸ்ட்: மார்ச் 31-ஏப்ரல் 4 - கிங்ஸ்மீட், டர்பன்


2வது டெஸ்ட்: ஏப்ரல் 8-12 - செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், க்கெபர்ஹா


மேலும் படிக்க | IPL 2022; இதை செய்தால் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாது - பிசிசிஐ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR