இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. முதல் 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. 5வது மற்றும் கடைசி போட்டி பெங்களுருவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்புக்கு இடையே நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இருதரப்புக்கும் மகிழ்ச்சியாக தொடர் நிறைவடைந்திருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இப்படி செய்யலாமா ருதுராஜ் கெய்க்வாட்? விளாசும் நெட்டிசன்கள்


கேசவ் மகாராஜின் பக்தி


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்காவில் வசிக்கிறார். அவர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தாலும் இந்தியாவின் இந்துமத பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறார். கேசவ் மகாராஜ் ஹனுமானின் தீவிர பக்தராம். 1874 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து டர்பனுக்கு வேலை தேடி கேசவ் மகாராஜின் குடும்பத்தினர் குடி பெயர்ந்துள்ளனர். அன்று முதல் அவர்களது குடும்பம் அங்கேயே வசிக்கத் தொடங்கியது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் கேசவ் மகாராஜின் உறவினர்கள் வசிக்கின்றனர். 



கேசவ் மகாராஜ் பிறப்பு 


கேசவ் மகாராஜ் 1990 பிப்ரவரி 7 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். கேசவ் மகாராஜின் தந்தை கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டு அந்நாட்டின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து மகன் கேசவ் மகாராஜூம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி அந்நாட்டின் தேசிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை!


தென்னாப்பிரிக்கா அறிமுகம்


கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்காவுக்காக மூன்று வடிவங்களிலும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். 42 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளையும், 21 ஒருநாள் போட்டிகளில் 26 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 9 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அண்மைக்காலமாக தென்னாப்பிரிக்கா அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். 



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR