DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை!

இந்தியா விளையாடிய முதல் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களின் தற்போதைய நிலை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களைத் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 20, 2022, 03:31 PM IST
  • இந்திய அணி தனது முதல் டி-20 போட்டியை 2006ஆம் ஆண்டு விளையாடியது.
  • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி.
  • முதல் போட்டிக்கு சேவாக் கேப்டனாகச் செயல்பட்டார்.
DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை! title=

இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இருபது ஓவர் போட்டியை 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி விளையாடியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்தியாவின் முதல் டி-20 லெவன் அணியில் இடம்பெற்றோர் தற்போது என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

தொடக்க வீரர்கள்:

முதல் டி-20 போட்டிக்குக் கேப்டனாக இருந்த அதிரடி வீரர் சேவாக் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டு கமெண்ட்ரி செய்துவருகிறார். அத்துடன் சில கிரிக்கெட் அகாடமிகளையும் நடத்திவருகிறார் சேவாக்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் முதலும் கடைசியுமாக விளையாடிய சர்வதேச போட்டியே இதுதான். சச்சினைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஆடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார்; ஆனால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை எனக் கூறலாம். அந்த வகையில் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓர் ஆலோசகராக இருந்துவருகிறார் சச்சின்.

இந்தப் பட்டியலில் அடுத்ததாக உள்ளவர்- அப்போட்டியில் ஒன் டவுனாக இறங்கிய தினேஷ் மோங்கியா. இடது கை பேட்ஸ்மேனான தினேஷ் மோங்கியா, தற்போது அரசியலில் ஈடுபட்டுவருகிறார், அண்மையில் பாஜகவில் இணைந்த தினேஷ் மோங்கியா, அருணாச்சலப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவும் உள்ளார்.

இப்போட்டியில் விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட எம்.எஸ். தோனி தற்போது சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இன்னும் விளையாடிவருகிறார். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டுவருகிறார் தோனி.

தினேஷ் கார்த்திக் எனும் தனி ஒருவர்:

இந்தப் பட்டியலில் அடுத்ததாக உள்ளவர் தினேஷ் கார்த்திக். ஆம், இந்தியாவுக்காக முதல் 20 ஓவர் போட்டி விளையாடிய நபர்களில் தற்போதும் சர்வதேச போட்டிகள் விளையாடிவரும் ஒரே நபர் நம்ம தினேஷ் கார்த்திக்தான். அணியில் இடம் கிடைக்காத காலங்களில் அவ்வப்போது கிரிக்கெட் கமெண்ட்ரி செய்துவந்த தினேஷ் கார்த்திக், தற்போது மாஸ் கம்பேக் கொடுத்து அணியில் அசைக்க முடியாத இடத்தில் இருந்துவருகின்றார்.

லிஸ்ட்டில் அடுத்த வீரர் சுரேஷ் ரெய்னா. தோனியுடன் சேர்ந்து சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற ரெய்னா ஐபிஎல் போட்டிகளிலும் புறக்கணிக்கப்பட்டார். தற்போது கமெண்ட்ரி செய்துவரும் ரெய்னா விரைவில் ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இடத்தில் உள்ள ஆல்ரவுண்டர் இர்பான் பதான், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று சினிமா பக்கம் ஒதுங்கியுள்ளார். தமிழ்த் திரைப்படமான நடிகர் விக்ரமின் கோப்ராவிலும்கூட இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். 

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், அண்மையில்தான் அரசியலில் குதித்தார். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஹர்பஜன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் மாறியுள்ளார். இது மட்டுமில்லாமல் சினிமாக்களிலும் கூட நடித்துவருகிறார் ஹர்பஜன்.

மேலும் படிக்க | நான் மட்டும் இருந்திருந்தா... 2011 World cup பற்றி கொளுத்திப் போட்ட அக்தர்!

 

வேகப் பந்துவீச்சாளர்கள்:

2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்துவருகிறார். அத்துடன் ஃபிட்னஸ் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றையும் தற்போது நடந்திவருகிறார் ஜாகீர்கான்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர், கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராகவும் பணியாற்றிவருகிறார் அஜித் அகர்கர்.

இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றார். சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும்கூட ஸ்ரீசாந்த் நடித்திருந்தார்.

மேலும் படிக்க | தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட விஜய்.. வைரலாகும் பர்த்டே Common DP!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News