ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. 


எனவே பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணியில் ஷிகர் தவன் 10 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து டேவிட் வார்னருடன் மற்றும் மோசஸ் ஹென்ரிக்ஸ் இணைந்து நிதானமாக ஆடி கொல்கத்தாவுக்கு எதிராக ரன் சேர்த்தன. 10-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. அதனையடுத்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி 44 ரன்கள் எடுத்தார்.


கடைசியாக 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.


அதன் பின்னர் ஆட வந்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே வீர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் கொல்கத்தா அணியின் ரன் சதவிகிதம் குறைந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மறுமுனையில் போராடிய மணீஷ் பாண்டே 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


இறுதியில் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியது.


தனது இறுதிச்சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்ட ஹைதராபாத் அணி நாளை குஜராத்துடன் மோத உள்ளது. இப்போட்டி டெல்லியுள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை நடைபெறும். 


இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பெங்களூரை சந்திக்கும்.