இலங்கை T20 முத்தரப்பு தொடர்: மூன்று தமிழக வீரகளுக்கு வாய்ப்பு
வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ள டி20 முத்தரப்பு தொடரில் கோலி மற்றும் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்த தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையின் 70_வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் வரும் மார்ச் 6-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியுடன் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலுக்கு செல்லும்.
இந்தப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டது. இதில் முன்னால் கேப்டன் தோனி, கேப்டன் விராத் கோலி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
கேப்டன் கோலி இல்லாத நிலையில் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் மற்றும் துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார்.
இந்த தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தொடரில் மொத்தம் மூன்று தினேஷ் தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விஜய்சங்கரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தரும், தினேஷ் கார்த்திக் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
போட்டி அட்டவணை விவரம்:
மார்ச். 6: இந்தியா - இலங்கை
மார்ச். 8: இந்தியா - வங்காளதேசம்
மார்ச்.10: இலங்கை - வங்காளதேசம்
மார்ச்.12: இந்தியா - இலங்கை
மார்ச்.14: இந்தியா - வங்காளதேசம்
மார்ச்.16: இலங்கை - வங்காளதேசம்
மார்ச்.18: இறுதிப்போட்டி.