இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹராத், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்த ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைப்பெறுவார் என தெரிகிறது.


இடது கை சுழற்பந்து வீரரான ஹராத், இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 விக்கெட்டுகள் சாதனைக்குப் பின்னர் இலங்கையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெயரினை இவர் பெற்றுள்ளார்.


40 வயதாகும் ஹராத், "இங்கிலாத்துக்கு எதிரான தொடர் எனது இறுதித் தொடராக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஓய்வு எடுக்கும் காலம் வரும், அந்த ஓய்வு காலம் எனக்கும் வந்துவிட்டது என என்னுகிறேன்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 


தில்ருவன் பெரேரா, அகிலா டான்ஜாயா மற்றும் லக்ஷண் சாண்டகன் போன்ற சுழற்பந்து வீரர்களுடன் இலங்கை பலம் வாய்ந்த அணியாக இருக்கும் நிலையில் தற்போது இலங்கை அணியில் இருந்து விடைப்பெறுவது சரியான தருணமாக இருக்கும் என ஹராத் கருதுவதாக தெரிகிறது.


Read this story in English