தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 76ஆவது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியின் அடிப்படையில் செப்டம்பர் 6 முதல் 10-ந்தேதி வரை அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறும் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும். நேற்றைய தொடக்க நாளில் 4 புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் சுரேஷ் 29.23 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார். 2011ஆம் ஆண்டில் சர்வதேச வீரர் ஜே.அக்னீஸ்வர் 29.52 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தனுஷ் முறியடித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல 200 மீட்டர் ஃப்ரீஸ்ட்ரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார். அவர் பந்தய தூரத்தை 2 நிமிடம் 21.60 வினாடியில் கடந்து தனது பழைய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு 2019-ல் அவர் 2 நிமிடம் 21.71 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. முதல் நாளில் தனுஷ் 2 புதிய போட்டி (மீட்) சாதனை புரிந்தார். இதே போல ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர் பிளை நீச்சலில் டி.ஆதித்யா 56.93 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டில் அரவிந்த் 57.00 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. மேலும் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர் பிளை பிரிவில் பெனடிக்டன் ரோகித் 25.47 வினாடியில் நீந்தி புதிய சாதனை புரிந்தார். 



இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு விநாயக் 25.55 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 400 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் சத்யசாய் கிருஷ்ணன், மான்யா முக்தா, 200 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் பெனடிக்டன் ரோகித், சக்தி, 50 மீட்டர் ஃப்ரீ ஸ்ட்ரோக் பெண்கள் பிரிவில் ஸ்ரீயா இஸ்வர், 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் நிதிக், மதுமிதா ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர். முதல் நாள் போட்டியில் புதிய சாதனை படைத்தவர்களை மாநில நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திர சேகரன், துணை தலைவர் முகுந்தன், பொருளாளர் முரளிதரன் ஆகியோர் பாராட்டினார்கள்.


மேலும் படிக்க | அயர்லாந்து கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகன் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ