’ரியல் ஜாம்பவான்’ ஸ்டூவர்ட் பிராட் ஓய்வுக்கு யுவராஜ் சிங்கின் ரியாக்ஷன்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் ஸ்டூவர்ட் பிராடுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உண்மையான ஜாம்பவான் நீங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஓவலில் நடைபெற்று வரும் ஆஷஷ் தொடரின் கடைசி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். 17 ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும், ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அவர் ஓய்வு முடிவை அறிவித்தவுடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங், ஸ்டுவர்ட் பிராட் நீங்கள் உண்மையான ஜாம்பவான் என மனதார பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!
யுவராஜ் சிங் விளாசிய 6 சிக்சர்
2007 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற தொடக்க டி-20 உலகக்கோப்பை தொடரில், லீக் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. அதில், யுவராஜ் சிங் பேட்டிங் ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அமர்களப்படுத்தியதுடன், உலக சாதனையும் நிகழ்த்தினார். அப்போது வெறும் 21 வயதே ஆன ஸ்டூவர்ட் பிராட் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார். இதற்கு காரணம் பிளிண்டாப் தான். பிராட் வீசுவதற்கு முந்தைய ஓவரில் யுவராஜ் சிங்குடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் செம கடுப்பில் இருந்த யுவராஜ் சிங் ஸ்டுவர்ட் பிராட் ஓவரை பொளந்து கட்டினார். இதன் மூலம் வெறும் 12 பந்துகளில் அரைசதமும் அடித்தார் யுவ்ராஜ் சிங்.
ஸ்டுவர்ட் பிராட் ஒப்புதல்
ஓய்வு முடிவு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட யுவ்ராஜ் சிங் அடித்த 6 சிக்சர்கள் குறித்து ஓபனாக பேசினார் ஸ்டுவர்ட் பிராட். அந்த ஒரு சம்பவம் தான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக பயணிக்க உதவியதாக கூறியுள்ளார். அதனால் ஏற்பட்ட வலி மற்றும் காயத்தில் இருந்து விடுபட கடுமையாக பயிற்சி எடுத்ததால், இத்தனை ஆண்டுகாலம் கிரிக்கெட் விளையாட முடிந்ததாகவும் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ஓய்வு அறிவிப்புக்கு யுவ்ராஜ் சிங் தெரிவித்தத பாராட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்திய 5வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ