INDvsWI: முதல் 2 ODI போட்டிகளில் இருந்து Stuart Law நீக்கம்!
இந்தியாவிற்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்ட்ரவுட் லா நீக்கப்பட்டுள்ளதா ICC அறிவித்துள்ளது!
இந்தியாவிற்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்ட்ரவுட் லா நீக்கப்பட்டுள்ளதா ICC அறிவித்துள்ளது!
ICC சட்டவிதிகளை மீறியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்ட்ரவுட் லா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஸ்ட்ரவுட் லா-விற்கு 3 டீ மெரிட் புள்ளிகள் மற்றும் 100% ஊதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் நடைப்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிரண் பவுள் ஆவுட் ஆனபோது, பயிற்சியாளர் ஸ்ட்ரவுட் லா தொலைக்காட்சி நடுவர்களின் அறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும், பின்னர் 4-வது நடுவர் அறைக்கு சென்று அங்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த செயல்பாடானதி ICC சட்டவிதி கட்டுரை 2.7-னை மீறிய செயலாகும். எனவே ICC சட்ட விதிகளை மீறியாதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்ட்ரவுட் லா-விற்கு 3 டீ மெரிட் புள்ளிகள் மற்றும் 100% ஊதிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரவுட் லா 3 டீ மெரிட் புள்ளிகள் பெற்றுள்ளதால், அடுத்தாக நடைபெறவுள்ள 2 ஒருநாள் போட்டிகளில் (இந்தியாவிற்கு எதிரான 2 ஒருநாள் போட்டி) பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆதாவது வரும் அக்டோபர் 21 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைப்பெறும் ஒருநாள் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.