சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை இந்தியா 2-2 என டிரா செய்தது.
இந்நிலையில் இன்று இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என நியூசிலாந்தை வீழ்த்தியது.
முதல் பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங், மந்தீப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 2-வது பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றது.
நியூசிலாந்து வீரர்களால் எதிர்கோல் அடிக்க முடியாததால் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.