இந்திய அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து ரோஹித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கலந்துகொண்டது. கோப்பையை வெல்லுமென்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. தோல்விக்கு காரணம் ப்ளேயிங் லெவனை ஒழுங்காக தேர்வு செய்யாததுதான் என ரசிகர்கள் விமர்சித்தனர். மேலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் தோல்விக்கு காரணமென்று விமர்சனம் வைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய கோப்பை தொடரில் இந்திய ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது விராட் கோலி சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பதுதான். 7ஆவது டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த சூழலில் விராட் கோலியின் ஃபார்ம் முக்கியமானதாக கருதப்படுகிறது.



டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹார் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | 'எனக்கு பசி இன்னும் அடங்கல...' - முதல் கிராண்ட்ஸ்லாமை முத்தமிட்ட பிறகு கார்லோஸ் கர்ஜனை


இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பௌன்ஸ் இருக்கும். பவர் ப்ளே ஓவர்களில் தீபக் சஹார் விக்கெட் எடுக்கக்கூடிய வீரர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும். அதில் தீபக் சஹார் மிக முக்கியமாக தேவை. எனவே வரும் டி20 உலகக்கோப்பையில் தீபக் சஹாரை சேர்ப்பது இந்திய அணிக்கு பெரிய பலனை கொடுக்கும்” என்றார்.


மேலும் படிக்க | Chennai Open Tennis: தகுதிச் சுற்றில் விளையாடிய 5 இந்தியர்களும் தோல்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ