ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை மத்தியப் பிரதேசம் அணி வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. ரஞ்சியில் கோலோச்சிய ஒரு அணியை, ரஞ்சி இறுதிப்போட்டியில் வீழ்த்துவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. இதனால் மத்திய பிரதேச அணிக்கு வாழ்த்துகள் குவிந்தது. அதேநேரத்தில் மும்பை அணி தோற்றிருந்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சர்பிராஸ்கான். தொடர்ச்சியாக தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் சதம் இரட்டை சதம் என விளாசி, இந்திய அணிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நீக்கம்?


அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் சர்பிராஸ்கான் குறித்து பேசும்போது, மும்பை அணி தோற்றிருந்தாலும் சர்பிராஸ்கானின் பேட்டிங் ரஞ்சி டிராபி தொடர் முழுவதும் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும், ஒருவேளை தேர்வு செய்யப்படாமல் போனால் வியப்பான ஒன்றாகதான் இருக்கும் என கூறியுள்ளார். 



இந்திய டெஸ்ட் அணியில் புஜாராவின் இடம் இப்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பிடித்திருந்தாலும், அந்த தொடருக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது சந்தேகம் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். அவருக்கான இடத்தை சர்பிராஸ்கானுக்கு கொடுக்கலாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். புஜரா தன்னுடைய கடைசி வாய்ப்பை நழுவ விடும்பட்சத்தில், அந்த இடம் கட்டாயம் சர்பிராஸ்கானுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர் என வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். 


மேலும் படிக்க | இந்திய அணியை பதற வைத்த அயர்லாந்து ’பாண்டியா’ ஹாரி டெக்டர்


ரஞ்சி டிராபியின் இந்த சீசனில் 6 போட்டிகளில் களமிறங்கிய சர்பிராஸ்கான், 122.75 சராசரியுடன் 982 ரன்கள் குவித்துள்ளார். 4 சதங்கள் மற்றும் 2 அரை சதங்களையும் விளாசி அசத்தியுள்ளார். ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் இரண்டு சீசன்களில் 900 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். பிசிசி நிர்வாகிகளும் சர்பிராஸ் கானுக்கான வாய்ப்பு எதிர்வரும் தொடர்களில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR