ஏப்ரல் 23 ஆம் தேதி என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அலர்ஜி போல. 2013 ஆம் ஆண்டு இதேநாளில் 263 ரன்கள் குவித்த அந்த அணி, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டான இன்றும் மிகமிக சொற்ப ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது. 2017-ல் 49 ரன்களுக்கு ஆல்அவுட்டான அந்த அணி, இன்றைய நாளில் 68 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் மிக சொற்ப ரன்களுக்கு ஆல்அவுட்டான முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியின் மார்கோ ஜேன்சன், பெங்களுரு அணியின் சரிவுக்கு பிள்ளையார் சுழி போட்டார். தன்னுடைய முதல் ஓவரிலேயே பாப் டூபிளெசிஸ் மற்றும் விராட் கோலியை வீழ்த்திய அவர், அடுத்த ஓவரில் அனுஜ் ராவத்தை பெவிலியனுக்கு அனுப்பினார்.


மேலும் படிக்க | IPL2022: சண்டை போட்டுக்கொண்ட சாஹல் - குல்தீப்


இதற்கடுத்து பெங்களூரு அணி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பும் வேலையை தமிழக வீரர் நடராஜனும், சுழற்பந்துவீச்சாளர் ஜெகதீசன் சுஜித்தும் பார்த்துக் கொண்டனர். நடராஜன் 3 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுஜித் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் தலா ஒருவிக்கெட்டுகளை எடுத்தனர். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பிரபுதேசாய் 15 ரன்கள் எடுத்தார். முடிவில் அந்த அணி 16.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.



பின்னர் எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, 8 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும், புள்ளிப் பட்டியலிலும் சன்ரைசர்ஸ் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. முன்னதாக மாலை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூரு அணி, 4வது இடத்தில் உள்ளது. 


மேலும் படிக்க | ரிஷ்ப் பன்டுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்ட அஸ்வின் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR