டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சலசலப்புக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்தன
ஜாஸ்பட்லர் சதம்
டாஸ் வெற்றி பெற்ற ரிஷப் பன்ட் பவுலிங்கை தேர்வு செய்ய, ஒருவேளை பேட்டிங்கை தேர்வு செய்திருக்கலாமோ? என நினைக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடினார் பட்லர். முதலில் மெதுவாக விளையாடிய அவர், போகப்போக வாண வேடிக்கைகளை நிகழ்த்தினார். டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் நொறுக்கித் தள்ளினார். தலா 9 பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய அவர் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | ipl2022-ல் அதிக ரன்களை அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்
மெகா இலக்கு நிர்ணயம்
அவர் ஒருபுறம் விளாச மறுமுனையில் இருந்த தேவ் தத் படிக்கல் ஃபார்ம் அவுட்டில் இருந்து திரும்பி டெல்லி அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார். இந்த ஐபிஎல் போட்டியில் முதல் அரைசதம் அடித்தார். அவருக்குப் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனும் 16 பந்துகளில் 46 ரன்கள் விளாசியதால், 222 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி.
டெல்லி அதிரடி
மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியும் அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பிரித்திவி ஷா அதிரடியாக விளையாடினர். அவர்களுக்கு பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பன்டும் அதிரடியாக விளையாடியதால், டெல்லி அணியும் இலக்கை நோக்கி முன்னேறியது.
தமிழில் ஸ்கெட்ச்
ரிஷப் பன்ட் விக்கெட் எடுக்க அஸ்வினை பந்துவீச அனுப்பினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். அப்போது, பந்துவீசவதற்காக தயாராக இருந்த அஸ்வின், சாம்சனிடம் தமிழில் உரையாடினார். ’அவன் இறங்குகிறதுக்கு வாய்ப்பிருக்கு, இறங்குனா பந்தா வைடா போட்றேன். ரெடியா இரு’ என கூறும் அஸ்வின், ’முதல் பால் கூட இறங்கலாம்’ எனக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Ashwin and Sanju Samson Tamil conversation@ashwinravi99 @IamSanjuSamson @SriniMaama16 pic.twitter.com/xeiEvn7ht4
— Bala Mahesh (@mahesh2me) April 22, 2022
மேலும் படிக்க | RRvsDC: நூறு எனக்கு ரொம்ப ராசி - பட்லர் மந்திரம்
சலசலப்பு
போட்டியின் இறுதியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றாலும், கடைசி ஓவரில் நோ பால் அப்பீல் கேட்டு டெல்லி அணி வீரர்கள் அப்பீல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரிஷப் பன்ட் வீரர்களை களத்தில் இருந்து வருமாறு அழைத்தார். இதற்கு அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR