வார இறுதி நாள் என்பதால் ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.  பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்டு தலைமையிலான  டெல்லி அணியும் மோதுகின்றன.  புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில இருக்கும் டெல்லி அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.  அதனால் இந்த போட்டியில்  வெற்றி பெற அதிக கவனம் செலுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ச்சியாக மூன்று போட்டியில் தோல்விக்கு பிறகு கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றது மும்பை அணி.  தற்போது மும்பை அணி 11 போட்டிகள் விளையாடி 5ல் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.  இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக வென்றால் மட்டுமே பிளே ஆப் செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது மும்பை அணி.  அதனால் இன்றைய போட்டியில் ரசிகர்களின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.



மறுபுறம் மாலை 7.30 க்கு தொடங்கும் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.  இந்த ஐபிஎல் சீசனில் ஆதிக்கம் செலுத்தி வரும் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் முதல் அணியாக பிளே ஆப்பிர்க்கும் தகுதி பெற்றுள்ளது.  ராஜஸ்தான் அணிக்கும் மும்மை அணியின் நிலைமையே.  மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே கனவு நிறைவேறும்.  சென்னை அணியை பொறுத்தவரை எந்த ஒரு கடினமும் இல்லாமல் அசால்ட்டாக மீதமுள்ள போட்டிகளில் விளையாட உள்ளது.  மும்பை vs டெல்லி அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.



ALSO READ டி20 உலக கோப்பை 2021: எந்த அணியில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR