பி.சி.சி.ஐ., மீதான தீர்ப்பை  வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிபதி லோதா தலைமையிலான குழு பி.சி.சி.ஐ.,க்கு பல்வேறு பரிந்துரைகள் செய்தது. இதை அமல்படுத்த பி.சி.சி.ஐ., தயக்கம் காட்டியது. இதனால், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என லோதா குழு சார்பில் கூறப்பட்டது. 


சுப்ரீம் கோர்ட் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான லோதா குழு பி.சி.சி.ஐ.,யில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ., இதனை நிறைவேற்ற இதுவரை தயக்கம் காட்டி வருகிறது. இதனையடுத்து பரிந்துரை செய்யப்பட்ட மாற்றங்களை பி.சி.சி.ஐ., நிறைவேற்றவில்லை, எனவே பொறுப்பில் உள்ளவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் லோதா குழு கூறியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், வரும் 17ம் தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்தது சுப்ரீம் கோர்ட்.