ஸ்ரீநகர்: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18, 2020) ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங்கை சந்தித்தார். உள்ளூர் காஷ்மீர் (Kashmir) இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கான மாநில காவல்துறையின் திட்டங்கள் குறித்து அவர் விவாதித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் காஷ்மீர் இளைஞர்கள் (Kashmiri Youth) தங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ள ரெய்னா அவர்களுக்கு உதவ வேண்டுமென ஜம்மு காஷ்மீர் காவல்துறை (Jammu Kashmir Police) விரும்புகிறது. ரெய்னா முன்னதாக, தானே முன்வந்து ஜம்மு காஷ்மீரின் சில மாநில அளவிலான மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அணிகளை சந்தித்து அவர்களுக்கு பயிற்சிகளை அளித்துள்ளார்.


இப்பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற குழந்தைகளின் கிரிக்கெட் திறன்களை (Cricketing Skills) மேம்படுத்துவதற்கும் மெருகூட்டுவதற்கும் ஒரு வாய்ப்பை விரும்பிய ரெய்னா, ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட்டை மேம்படுத்த முன்வந்துள்ளார்.


ALSO READ: IPL 2020: அவசர அவசரமாக இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா... என்ன காரணம்?...


அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா, இந்த யூனியன் பிரதெசத்தில், கிராமப்புறங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள திறமையான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு பயிற்சியளிப்பதுதான் இந்த முயற்சிக்கு பின்னால் உள்ள தனது நோக்கம் என்று கூறினார்.


"ஜம்மு காஷ்மீர் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்கள் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதே எனது நோக்கம். சரியான திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், தேசிய அணிக்கு எதிர்கால கிரிக்கெட் அணிகளுக்காக ஒரு புதையலாக அவர்களை அளிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்" என்று ரெய்னா ஜே & கே காவல் பணிப்பாளர் நாயகம் (DGP) தில்பாக் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.


ரெய்னா ஓய்வு பெறுவதற்கு சற்று முன்னர் அவரது வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையை வாழ்த்திய ஜம்மு காஷ்மீர் காவல்துறை (Jammu Kashmir Police), அவரை அங்கு கிரிக்கெட் திறன்களை வளர்க்க அழைத்திருந்தது.


மேலும், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கிரிக்கெட் திறன்களை வளர்ப்பதில் நீங்கள் எங்களுடன் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இங்கே எங்கள் இளைஞர்களுடன் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் பிற அணிகளும் உங்கள் அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றன” என ஜம்மு காஷ்மீர் காவல்துறை ரெய்னாவை வாழ்த்தியிருந்தது.


ALSO READ: IPL 2020: CSK ‘சின்ன தல’-ய பெருசா miss பண்ணுவாங்க – Dean Jones!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR