ICC T20 Ranking: தம்பி கொஞ்ச நேரம் கீழ இருங்க.. பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி ஐசிசி 20 ஓவர் தரவரிசைப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய அணி வீரர் சூர்ய குமார் யாதவ்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்ய குமார் யாதவ் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து அவரின் தரவரிசை உயர்ந்துள்ளது. கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் 801 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இரண்டு புள்ளிகளை இழந்து 3வது இடத்துக்கு சரிந்தார். அவர் 799 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருக்கிறார். அவர் 861 புள்ளிகளுடன் முதல் இடத்தை சிம்மாசனமிட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்ரம் 4வது இடத்திலும், பின்ச் 5வது இடத்திலும் இருக்கின்றனர்.
சூர்ய குமார் யாதவை தவிர்த்து டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13வது இடத்திலும், விராட் கோலி 15வது இடத்திலும் இருக்கின்றனர். சரியாக விளையாடாத கேஎல் ராகுல் 22வது இடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் புள்ளிகளை இழந்த புவனேஷ்வர் குமார் 10வது இடத்தில் இருக்கிறார். அக்ஷர் 18வது இடத்திலும், சாஹல் 26வது இடத்திலும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!
மேலும் படிக்க | இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ