இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 தொடர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடாவிற்கு பதிலாக இடது கை பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதுகு வலி காரணமாக தொடரில் இருந்து ஹூடா நீக்கப்பட்ட நிலையில், ஓய்வு அளிக்கப்பட்ட பாண்டியாவுக்கு பதிலாக அகமது சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஷமி கோவிட்-19 தொற்றில் இருந்து இன்னும் மீளவில்லை. அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்பதால், தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகுகிறார். தென் ஆப்ரியா தொடரில் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் தொடருவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர்! புவனேஷ்குமார் இடம் பறிபோகிறதா?
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது, அதன் முதல் போட்டி புதன்கிழமை செப்டம்பர் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்காக தயாராகி வருகிறது. டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. ஒருநாள் அணியின் தலைமை மூத்த பேட்ஸ்மேன் ஷிகர் தவானிடம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , அர்ஷ்தீப் சிங், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (சி), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலீ ரோஸ்ஸோவ்சி, டாப்ராசோவ்சி ஸ்டப்ஸ், ஜார்ன் ஃபோர்டுயின், மார்கோ ஜான்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ
மேலும் படிக்க | ரிஷப் பந்தின் சகோதரியா இவர்... பிறந்தநாள் புகைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ