IND vs SL, Suryakumar Yadav Record: இந்தியா - இலங்கை உடனான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் அசால்ட்டாக வென்றது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கிய காரணம் என்றாலும், சூர்யகுமார் யாதவின் அசத்தலான சதம்தான் இந்தியாவை போட்டியில் இருந்து அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 228 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 112 (51), சுப்மன் கில் 46 (36), ராகுல் திரிபாதி 35 (16) ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து, இந்தியாவின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் பெற்றார். அக்சர் படேல் தொடர் நாயகனாக தேர்வனார். 


மேலும் படிக்க | இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை!! ... சதமடித்த சூர்யகுமார் யாதவ்



அந்த வகையில், டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், சூர்யகுமார் யாதவ், நேற்றைய போட்டியில் சதம் அடித்து நொறுக்கியது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளார். டி20 அரங்கில் தொடர்ந்து, ரன்களை குவித்துக்கொண்டே இருக்கும் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த 112 ரன்களில், 9 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடக்கம்.


அவரின் நேற்றைய சதம்தான் 2023ஆம் ஆண்டு டி20 அரங்கில் பதிவான முதல் சதமாகும். தொடர்ந்து, சர்வதேச 43 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 14 அரைசதங்களையும், 3 சதங்களையும் அடித்து மிரட்டி வருகிறார். மேலும், சர்வதேச அளவில் 843 பந்துகளில் 1500 ரன்களை டி20 போட்டிகளில் கடந்துள்ளார். சர்வதேச டி20 அரங்கில் குறைந்த பந்துகளில் 1500 ரன்களை கடக்கும் முதல் வீரர் இவர்தான். 



மேலும் இவரின் இந்த சதம், அவருக்கு மூன்றாம் சதமாகும். ரோஹித் சர்மா சர்வதேச அளவில் 4 டி20 சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக, ஓப்பனிங்கில் களமிறங்காமல் மூன்று டி20 சதங்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைும் அவர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், அதிக சிக்ஸர்களை அடித்த ஓப்பனிங் அல்லாத இந்தியர், மூன்று வேறு கண்டங்களில் சதம் அடித்த முதல் வீரர் ஆகிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். 


இதனால், டி20இல் மட்டுமில்லாமல், ஒருநாள் அரங்கிலும் சூர்யகுமார் இத்தகைய வேகத்தில் செயல்பட்டால், 2011ஆம் ஆண்டு இந்தியாவின் கைகளில் தவழ்ந்த உலகக்கோப்பை இந்தாண்டும் நம் வசம் வரும் காலம் தூரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | விராட் வருவார்... உலகக்கோப்பையை வாங்கித் தருவார்... சீக்காவின் சொல்லும் சீக்ரெட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ