அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் உலகின் நம்பர் 1 வீராங்கனை
அமெரிக்க ஓபன் டென்னிஸின் மகளிர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலாந்தை சேர்ந்த ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரசித்திபெற்றது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர். இத்தொடரில் உலகின் முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொள்வார்கள். அந்தவகையில் தற்போது அமெரிக்க ஓபன் தொடர் நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஐந்தாவது வரிசையில் உள்ள ஆன்ஸ் ஜபேர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினார்கள். இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கார்சியாவை எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு ஜபேர் தகுதி பெற்றார்.
28 வயதான ஜபேர் முதல்முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் அவர் இறுதிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனையடுத்து, மற்றொரு அரை இறுதியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்வியாடெக், பெலாரஸைச் சேர்ந்த ஷபலென்காவை எதிர்கொண்டார். தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் ஷபலென்கா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று ஸ்வியாடெக்கிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஸ்வியாடெக் அடுத்த இரண்டு செட்டுகளையும் தொடர்ச்சியாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல்முறை முன்னேறியிருக்கிறார். இரண்டு முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பறற்றியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு ஸ்வியாடெக் மூன்றாவது முறையாக முன்னேறியிருக்கிறார்.
மேலும் படிக்க | இந்திய தடகளத்தில் முன்னேற்றம் - நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
இதனையடுத்து அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் ஜபேரும், ஸ்வியாடெக்கும் மோதிக்கொள்கின்றனர். அதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே)-கரென் கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-பிரான் செஸ்டியாபோ (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ