டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். இரண்டாவது இடத்தில் வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசனும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலியும் இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல், டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார். 


 



பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8ஆவது இடத்தில் உள்ளார்.



முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். மேலும் அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.


மேலும் படிக்க | இனி உலக கோப்பை போட்டிகள் Hotstar-ல் ஒளிபரப்பு இல்லை?


மேலும் நேற்று ஆசிய கோப்பையில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்திய அணி 40 ரன்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ