T20 World Cup: ஆங்கிலப் பெண்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்: முன்னால் கேப்டன் மிதாலி ராஜ்
ஒரு இந்தியனாக நான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக நான் இங்கிலாந்துக்கு அணிக்காக வருத்தப்படுகிறேன் என்று முன்னால் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
புது டெல்லி: மகளிர் டி 20 உலகக் கோப்பையின் (Women’s T20 World Cup) அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு (England) எதிரான மோதலில் ஒரு பந்துக்கூட வீசப்படாமல், இந்தியா பெண்கள் அணி முதன்முறையாக இறுதிப் போட்டியை எட்டியது. போட்டியின் விதிகளின்படி, அரையிறுதியை (Semifinals) மாற்று நாளில் நடத்த நேரம் இல்லை. சிட்னியில் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், இருஅணிகளில் முதலிடம் பிடித்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த சீசனில் தனது குருப்பில் இந்திய பெண்கள் அணி ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காததால், முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: யாருக்கு தமிழ் தெரியாது?... ரசிகரிடம் கோபம் கொண்ட மிதாலி ராஜ்!
தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் (Mithali Raj), அதேநேரத்தில் இங்கிலாந்து மகளிர் அணிக்காக மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறினார். அவர் கூறியது, "ஒரு இந்தியனாக நான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக நான் ஆங்கிலப் பெண்களுக்கான (English girls - England Team) உணர்வை புரிந்துக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "இதேபோன்ற சூழ்நிலையை தனது அணி எதிர்கொள்வதை ஒருபோதும் விரும்ப மாட்டேன் என்றும் ராஜ் கூறினார். "அந்தகைய சூழ்நிலையில் என்னையோ அல்லது எனது அணியையோ நான் ஒருபோதும் கொண்டு செல்ல விரும்பவில்லை. ஆனால் ஆட்டத்தின் விதிகள் அத்தகையவை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சர்வதே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மிதாலி ராஜ்!
மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடரில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வென்றதன் மூலம் இந்தியா தனது பயணத்தை தொடங்கியது, அதன்பிறகு பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான வெற்றிகளைத் தொடர்ந்து நான்கு போட்டிகளில் எட்டு புள்ளிகளுடன் குருப் "A" பிரிவில் முதலிடம் பிடித்தது.
அதேபோல இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடக்க உள்ளது. அதில் வெற்றி பெரும் அணி இந்திய பெண்கள் அணியுன் இறுதிப்போட்டியில் மோதும்.