IndvsPAK: மெல்போர்னில் மழைக்கு வாய்ப்பு; இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் மெல்போர்ன் மைதானத்தில் 70 விழுக்காடு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
20 உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த தயாராக இருக்கின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் எல்லாம் ஏற்கனவே விற்று தீர்ந்திருக்கும் நிலையில், மைதானத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இப்போது அவர்களுக்கு பேரிடியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானத்தில் 70 விழுக்காடு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், போட்டி ரத்து செய்வதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | IND vs PAK போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
மெல்போர்னில் மிரட்டும் மழை
2022 டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மெல்போர்னில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கும் வசதி கொண்ட இந்த மைதானத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த நேரத்தில் மெல்போர்னை கனமழை எச்சரிக்கை மிரட்டி வருகிறது. இது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கும் ரசிகர்கள், போட்டி ரத்து செய்யப்படுமா? என கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ரிசர்வ் நாள் இல்லை
வானிலை தகவலின்படி, போட்டி நடைபெறும் நாளான இன்று 70 விழுக்காடு மழைக்கான வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா? என்பது கேள்விக்குறி தான். அதே நேரத்தில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், அதற்கு ரிசர்வ் நாள் இல்லை. இதனால் இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ