சென்னையில் நடைபெற்றுவரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். போட்டி நடைபெறும் அரங்கத்தின் முகப்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்ற நாடுகளின் கொடிகள் அடங்கிய வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல அரங்கத்திற்கு உள்ளே செல்லக்கூடிய சாலையின் இரு புறங்களிலும் அனைத்து நாட்டு கொடிகளும் நடப்பட்டுள்ளன. ஆனால், முகப்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதல் கொடியாக ஆப்கானிஸ்தான் நாட்டு கொடி பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி செய்துவரும் தாலிபான்கள் பயன்படுத்தும் கொடி ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியாக பொறிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதேசமயம் செஸ் ஒலிம்பியாட் 2022இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி ஆப்கானிஸ்தான் அணியானது அந்நாட்டில் முன்னர் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தமூவர்ணக் கொடியின் கீழ் விளையாடுகிறது.



இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஆப்கானிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலும், உளவுத்துறையின் செயல் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவருமான அகமதுல்லா வாசிக்,  ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு இது இரு நாடுகளுக்கும் (இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்) இடையிலான நல்லுறவைக் காட்டுகிறது என்று ட்வீட் செய்தார். இதனையடுத்து இவ்விஷயமானது வெளிச்சத்திற்கு வந்தது. 


மேலும் படிக்க |  செஸ் விளையாட்டில் ராணிக்கு எப்படி வந்தது இவ்வளவு அதிகாரம் ? - ஓர் சுருக் ‘ஃப்ளாஷ்பேக்’!


நிலைமை இப்படி இருக்க ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய செஸ் கூட்டமைப்பின் தலைவர் குரைஷி ஒபைதுல்லா இவ்விவகாரம் தொடர்பாக பேசுகையில், “நாங்கள் இரண்டு கொடிகளையும் பயன்படுத்துகிறோம்.மைதானத்தின் உள்ளே பழைய கொடியைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பிரதான மைதானத்திற்கு வெளியே வெள்ளைக் கொடியைப் பயன்படுத்துகிறோம் எங்களுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.



இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக ஆனதால் தற்போது முகப்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த தாலிபான் கொடி அகற்றப்பட்டிருக்கிறது.. மேலும் சாலையில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பமும் அகற்றப்பட்டிருக்கிறது.  தலிபான் இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டையோ அதிகாரப்பூர்வமாக இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 7 வயது சிறுமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ