கோவை: தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் தற்போது தேனீர்விடுதி நடத்திவரும் சம்பவம் அனைவரது கவனத்தினை ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரின் 21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆரவாரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் பலரும் தங்கள் திறமைகளை நிறுபித்து வருகின்றனர். எனினும் இந்தியாவின் முழு திறமையும் அங்கு கொண்டச் செல்லப் படவில்லை என்பது தான் உன்மை.


திறமைமிக்க வீரர் வீராங்கனைகள் பலரும் வாய்ப்பு கிடைக்காமல் தங்கள் வீட்டிலேயே அடங்கியுள்ளனர் என்பதற்கு சான்றாக கோவையை சேர்ந்த 45-வயது தடகள வீராங்கனை கலைமணி இருக்கின்றார்.


தடகள போட்டியில் பதக்கங்கள் பல வென்ற இவர், தற்போது அரசாங்கத்தின் உதவி இல்லாததால் தனது வாழ்வாதாரத்திற்காக தேனீர் கடை நடத்திவருகின்றார். தினமும் 400 முதல் 500 வரை தினமும் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தேசிய, மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்ற இவர் 4 தங்கம் வென்றவர். தற்போதும் தினமும் 21km ஓட்டத்தினை தனது தினசரி பயிற்சியாக கொண்டுள்ளார். 


தேசிய அளவிலான பங்கேற்பிற்கு வங்கியினை அனுகியபோதும் அவருக்கு உதவிகள் மறுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்!