துபாயில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டேட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி
எங்களது அமைப்பின் மூலம் பின்புலம் இல்லாத திறமையான ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்: சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜான் அமலன்
சென்னை தேனாம்பேட்டையில் சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜான் அமலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "
தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் பொதுச் செயலாளராக விக்னேஷ் மாஜினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு பேர் இப்பதவிக்கு போட்டியிட்ட நிலையில் விக்னேஷ் மாஜினி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது திறமை மற்றும் கிரிக்கெட் போட்டியின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவர் கிரிக்கெட் வீரரும் கூட. இவர் வறுமையின் காரணமாக கிரிக்கெட் போட்டியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டவர். சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பாக கோயம்புத்தூர் பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிகள் செய்து வருகிறோம். எங்களது அமைப்பின் மூலம் பின்புலம் இல்லாத திறமையான ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
எங்களது அமைப்பின் சார்பாக 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி துபாய் நாட்டில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்: உண்மையை உடைத்த விராட் கோஹ்லி!
இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் கிரிக்கெட் வீரர்களின் விமான பயண செலவு தங்குமிடம் உணவு என அனைத்து செலவுகளையும் எங்களது அமைப்பே ஏற்கும். இறுதிப் போட்டி சென்னையில் நடத்தாமல் துபாய் நாட்டில் நடத்துவதன் காரணம் தமிழக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச மைதானங்களில் விளையாடும்போது அவர்களுக்கான அனுபவம் அதிகமாகும் என்பதுதான்.” என்று கூறினார்.
இந்த இறுதிப் போட்டியின்போது தங்களுடன் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார். தங்களது முயற்சிகளுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள விக்னேஷ் மாஜினி பேசுகையில்
தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் பெடரேஷன் பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ‘எனது பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன். திறமையான ஏழை-எளிய மாணவர்களை கண்டறிந்து கிரிக்கெட் போட்டியில் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன்’ என கூறினார்.
மேலும் படிக்க | தோல்விக்கு காரணம் இதுதான்! இணையத்தில் குமுறும் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ