Asia Cup 2022: ரவி சாஸ்திரியால் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பம்; வீடியோ வைரல்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டியில் டாஸ் போடும்போது ரவிசாஸ்திரி செய்த தவறால் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2022, 09:06 PM IST
Asia Cup 2022: ரவி சாஸ்திரியால் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பம்; வீடியோ வைரல் title=

துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் மோதுகின்றன. இதில் டாஸ்போடும்போது ரவிசாஸ்திரி செய்த சிறிய தவறு வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியிருக்கிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து மீண்டும் வர்ணனையாளர் பணிக்கு திரும்பியிருக்கும் அவர், இந்தியா - பாகிஸ்தான் மோதும் இப்போட்டியிலும் வர்ணனை செய்தார். டாஸ் போடும்போது அவரால் சிறிய குழப்பம் ஏற்பட்டது. 

ரவி சாஸ்திரியின் தவறு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக இரு அணி கேப்டன்களும் டாஸூக்காக மைதானதுக்கு வந்தனர். அப்போது வர்ணனை செய்த ரவிசாஸ்திரி, ரோகித்தை டாஸை சுண்டுமாறு அழைத்தார். ரோகித் மேலாக காயினை சுண்டும்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், டெயில் கேட்க, ரவிசாஸ்திரி ஹெட் என கூறுகிறார். ஆனால், பாபர் அசாம் கேட்டது தான் காயினில் விழுகிறது. போட்டி நடுவர் சுதாரித்து பாகிஸ்தான் கேப்டன் கேட்டதை கூற, அவர் டாஸ் வென்றதாக அழைத்து பேசினார் ரவி சாஸ்திரி.

மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!

மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்

வைரலாகும் வீடியோ

ரவி சாஸ்திரியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. சில நெட்டிசன்கள் அவரது ஆற்றலைப் பற்றியும் பாராட்டினர். சில பயனர்கள் அதை கேலி செய்தனர். அதிக சத்தம் காரணமாக அவர் தவறுதலாக பேசியிருக்கலாம் என்றும் சிலர் சப்போர்ட் செய்தனர். ஆசிய கோப்பையின் நடப்பு சீசனில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 8 நாட்களில் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. பரம எதிரிகளான இந்த இரு அணிகளும் வாரத்தில் இரண்டு முறை மோதுவது இதுவே முதல் முறை. துபாயில் நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, ஹாங்காங்கையும் வீழ்த்தியது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News