உலககோப்பை அணியில் ரிஷப் பண்டிற்கு பதில் தினேஷ் கார்த்திக்?
டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுங்கள் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை 2022க்கான அணியில் ரிஷப் பந்தை விட, தினேஷ் கார்த்திக் இடம் பெறலாம் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2022-ல் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார் ஸ்டெய்ன், வடிவத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி20-ல் தனது முதல் டி20 அரைசதத்தை அடித்தார் கார்த்திக்.
மேலும் படிக்க | முடிவுக்கு வரும் 2 வீரர்களின் இந்திய அணி வாய்ப்பு - பிசிசிஐ அதிரடி முடிவு
தற்பொழுது இந்திய அணியில் நிறைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் யாரை உலக கோப்பை அணியில் எடுப்பது என்பது பிசிசிஐக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இஷான் கிஷான் சமீபத்தில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் கூட அதிக விலைக்கு மும்பை அணியில் எடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ஃபினிஷர் இடத்தில் தற்போது பந்த்திற்கு போட்டியாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பந்த் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார்.
இந்திய அணியை பற்றி பேசிய டேல் ஸ்டெய்ன் “தென் ஆப்பிரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் பந்திற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் ஒரே தவறுகளைச் மீண்டும் மீண்டும் செய்வதாகத் தெரிகிறது. நல்ல வீரர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் அதை செய்ய மறுக்கிறார். அதே சமயம் தினேஷ் கார்த்திக் தான் ஒரு எப்படி பட்ட பிளேயர் என்பதை நிரூபித்து உள்ளார். இந்தியா உலகக் கோப்பைகளை வெல்ல விரும்பினால், ஃபார்மில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்பொழுது தினேஷ் கார்த்திக் மிகவும் அருமையான ஃபார்மில் இருக்கிறார், அவர் இந்த ஃபார்மைத் தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகக் கோப்பைக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணியில் அவர் இடம் பிடிப்பார்”என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR