கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இருக்கும் இந்தியா, இந்த ஆண்டு பல அதிரடி தொடர்களில் விளையாட உள்ளது. சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி இந்தியன் பிரீமியர் லீக் 2025 வரை இடைவிடாமல் பல தொடர்களில் விளையாடி, ரசிகர்களுக்கு பல சுவாரஸ்ய நிகழ்வுகளை தர உள்ளனர். புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில், இந்திய அணி உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர்களில் பல சவால்களை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு வரை விளையாட உள்ள போட்டிகளின் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா டி20 தொடரை 3-0 என்று வென்று, ஒருநாள் தொடரை 0-2 என்று தோல்வியடைந்தது. ஒரு மாத ஓய்விற்கு பிறகு பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Jay Shah: ஐசிசி தலைவர் ஆனார் ஜெய் ஷா... அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?


 


பங்களாதேஷ் தொடர்


வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்தியா. செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியும், செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட்டும் நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இடம் பெற உள்ளது. அக்டோபர் 6, 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் குவாலியர், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் போட்டிகள் நடைபெறும்.


நியூசிலாந்தின் சுற்றுப்பயணம்


பங்களாதேஷ் தொடரை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இந்தியா. முதல் டெஸ்ட் பெங்களூருவில் அக்டோபர் 16ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நவம்பர் 1ம் தேதியும் நடக்கிறது. 


தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்


இந்தியாவின் அடுத்த பெரிய சவால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் தான். அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றனர். நவம்பர் 8 ஆம் தேதி டர்பனில் முதல் போட்டி தொடங்கி, கயாபெர்கா, செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும். இந்த தொடருக்கு மூத்த வீரர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். ஏனெனில் அடுத்து பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது.


பார்டர்-கவாஸ்கர் டிராபி


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டிலும், பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறும். இந்த தொடர் இந்திய வீரர்களின் சகிப்புத்தன்மை, திறமை மற்றும் மன உறுதியின் உண்மையான சோதனையாக இருக்கும்.


இங்கிலாந்து தொடர்


ஆஸ்திரேலியப் பயணத்திற்குப் பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடுகிறது. இந்த தொடர் 2025 ஜனவரி 22 முதல் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பையிலும், ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும். 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா விளையாடுமா என்பது சந்தேகமே. 


மேலும் படிக்க | சிஎஸ்கேவின் இந்த 3 சிங்கங்கள்... மெகா ஏலத்தில் கேகேஆர் கொக்கிக் போட்டு தூக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ