IND vs PAK: ’அந்த தவறு இந்த முறை நடக்காது’ இந்தியாவின் ’கேம்’ பிளான்
ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
IND vs PAK: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த பத்தாண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர பிளேயர்களாக இருக்கின்றனர். அவர்கள் இருந்த இந்திய அணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருவரும் இப்போது அந்த தோல்விக்கு பரிகாசம் செய்ய காத்திருக்கின்றனர். பேட்டிங்கில் அதிரடி காட்ட காத்திருக்கிறார் ரோகித். அதேநேரத்தல் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் கோலி, இந்த போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணியை இறுதி செய்வதே இந்திய அணியின் தற்போதைய பெரிய இலக்கு. அதற்காக ஆசியக்கோப்பை தொடரை மிக முக்கிய தொடராக பார்க்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர்கள் விளையாடப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பெரிய போட்டியிலும் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இரு அணி வீரர்களும் போதுமான கள சந்திப்புகள் இல்லாமல் இருக்கின்றனர். உலகக்கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்த ஷாகீன் அப்ரிடி இந்தப் போட்டியில் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு ஆறுதலாக இருக்கும். அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் மற்ற பந்துவீச்சாளர்களை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
இந்திய அணியின் பேட்டிங்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல முயற்சிகள் செய்த போதிலும், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அதே பேட்ஸ்மேன்களையே இந்திய டாப் ஆர்டர் கொண்டுள்ளது. ரோஹித் மற்றும் ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் 360 டிகிரியில் விளையாடுவார் என நம்பலாம். கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களின் ஆட்டம் பெரிய அளவில் கவனிக்கப்படும். பந்துவீச்சிலும் 20 ஓவர் ஸ்பெஷலிஸ்டுகள் அதிகம் இருப்பதால், இந்திய அணி நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தும் என்பது பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கிறது.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ