ஐசிசி வருவாய் பகிர்வு முறையில் செய்திருக்கும் மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசி-யிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயில் ரூ.1,775 கோடி அளவுக்கு ‘வெட்டு’ விழுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணித்து ஐசிசி-க்கு பதிலடி கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. 


இது குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு டெல்லியில் நேற்று கூடியது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக கிளம்பிய பல்வேறு யூகங்கள் முடிவுக்கு வந்தன.


நிர்வாக கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, ஐசிசி-க்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது. 


இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் ‘ஸ்கைப்’ வழியாக தனது கருத்துகளை முன்வைத்தார். அவரது தரப்பினர் ஐசிசி-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், இந்த முடிவு அவர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறுகையில்:-


‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதி செய்யப்பட்ட பிறகே நிம்மதி வந்துள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் கும்பிளே, இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நீங்கள் விளையாடுவீர்கள். அதற்கு தயாராக இருங்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். வருவாய் பகிர்வு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மேலும் ரூ.650 கோடி தருவதாக ஐசிசி-க்கு சொல்கிறது. ஒவ்வொரு உள்ளூர் சர்வதேச ஆட்டத்துக்கும் ரூ.45 கோடி கிடைக்கும். ’ என்றார்.


மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு ஐசிசி வரவேற்பு தெரிவித்துள்ளன.