புதுடெல்லி: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக மும்பையில் மே 19 அன்று இந்திய கிரிக்கெட் அணி, Bio-bubble என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் நுழையும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய வீரர்கள் மே மாதம் 19ஆம் தேதி முதல் பாதுகாப்பான வளையமான Bio-bubbleக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


மூன்றரை மாத கால சுற்றுப்பயணமாக இங்கிலாந்திற்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்கள், மே 19ஆம் தேதியன்று மும்பையில் மீண்டும் 10 நாள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.  


“இங்கிலாந்திற்கு பயணிக்கும் இந்திய அணியினர் மும்பையில் ஒன்று சேர்ந்து  மே 19 முதல்  Bio-bubble பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவார்கள். மும்பையில் ஹோட்டல் அறைகளில் தங்க வைக்கப்படும் அவர்கள் வேறு எங்கும் வெளியே செல்ல மாட்டார்கள். 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிரகு ஜூன் 2 ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படும்”என்று இந்திய அணிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.


Also Read | கொரோனா உறுதியானால் இங்கிலாந்து சுற்றுப் பயணம் கிடையாது, BCCI கடும் எச்சரிக்கை


இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணியில் யாருக்கும் COVID-19 ஏற்படக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பி.சி.சி.ஐ (BCCI) தெரிவித்துள்ளது. Bio-bubbleஇல் இருக்கும் வீரர்கள் இங்கிலாந்தில் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது அங்கு அவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக, 
இந்திய வாரியம் (Indian board) இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் (England Cricket Board) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய குழுவினருக்கு சலுகை கிடைத்தால் அது அணிக்கு ஆக்கப்பூர்வமான தகவலாக இருக்கும்.


முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் கொண்ட அணியை (நான்கு காத்திருப்பு வீரர்கள் உட்பட) பிசிசிஐ அறிவித்தது. செப்டம்பர் 14 ஆம் தேதி முடிவடைய உள்ள போட்டிகளைத் தொடர்ந்து, ஜோ ரூட் (Joe Root) தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கலந்துக் கொள்ளும்.


Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி! 


இந்திய அணியின் 24 பேரில், கே.எல்.ராகுல் மற்றும் விருத்திமான் சஹா என இருவரும் உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும், சில நாட்களுக்கு முன்பு கோவிட் -19 பாதிப்பை எதிர்கொண்ட பிரசீத் கிருஷ்ணாவுக்கு நோய் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவித்தால் தான் அவர் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்வார்.


அதேசமயம், இந்திய மகளிர் அணிக்கான அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். இந்தியா பெண்கள் ஜூன் 16 முதல் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று W20I மற்றும் பல T20I மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்கள்.


 Also Read | மனைவி, ஆசைநாயகி இருவருக்கும் மரண காப்பீட்டுத் தொகை பிரித்து கொடுக்கப்பட்ட விநோதம் 


இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், மாயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, மொஹமட். ஷமி, எம்.டி.சிராஜ், ஷார்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா 


காத்திருப்பு வீரர்கள்: அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா


Also Read | IPL 2021 மீண்டும் எங்கு, எப்போது நடைபெற வாய்ப்பு இருக்கிறது? சாத்தியக்கூறுகள் இவை


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR