டிராவிட் தலைமையில் சாதித்துக் காட்டிய இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகித்தது. நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது.
ALSO READ பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பதவியை ராஜினாமா செய்த ஆஸ்திரேலிய கேப்டன்!
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறியது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. விராட் கோலி இந்த தொடருடன் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலமும் இந்த தொடருடன் முடிந்தது. இதனையடுத்து தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் டி20 புதிய கேப்டனாக ரோகித்சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் டி20 தொடரை தோல்வியுற்று இருந்தது. இந்தியா U-19 அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் முதல்முறையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த தொடர் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்ற நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரை வென்றுள்ளது. மேலும் கேப்டனாக ரோஹித் சர்மா இந்த தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது இந்திய அணிக்கு பக்கபலமாக அமைந்தது. உலக கோப்பை போட்டிகளிலும் முதலில் டாஸ் வெற்றி பெற்றிருந்தால் போட்டியின் முடிவுகள் மாறியிருக்கும் என்று ஒரு பரவலான கருத்து இருந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடினர். பவுலிங்கில் ஹர்சல் படேல் மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினர். நாளை நடைபெற உள்ள கடைசி t20 போட்டியில் முதல் இரண்டு போட்டியில் விளையாடாத மற்ற வீரர்கள் அனைவரும் விளையாடுவார் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ALSO READ நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR