புதுடெல்லி: சர்வதேச உலகில் காஷ்மீர் விவகாரத்தில் தலைகுனிவு ஏற்பட்டதை அடுத்து, பண நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விவகாரத்திலும் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதவாது, 10 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் என்பதை அந்நாட்டுக்கு மீண்டும் உணர்த்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 19 வரை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால் 10 இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டனர். லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வேலா, குஷால் ஜானித் பெரேரா, தனஞ்சய் டி சில்வா, திசாரா பெரேரா, அகில தனஞ்சய், ஏஞ்சலோ மேத்யூஸ், டன்னல் லக்மல், தினேஷ் சந்திமல் மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளர்.


இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய வீரர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வழங்கப்பட்டது. அதேவேலையில் போட்டிகளில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் வீரர்களுக்கு வழங்கியது. 


ஆனாலும் பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் ஆட ரெடி. ஆனால் பாகிஸ்தானில் சென்று ஆட மாட்டோம் என திட்டவட்டமாக கூறிய 10 இலங்கை வீரர்கள் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.