டெண்டுல்கருக்கு விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரம்
விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை வழங்கினார்.