தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் அபராமாக வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில், கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | DRS: 3வது நடுவரால் கொந்தளித்த இந்திய வீரர்கள்.! விராட் செய்தது சரியா? Video


முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல்அவுட்டான இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை 210 ரன்களுக்கு சுருட்டியது. 13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸைப் போலவே பேட்டிங்கில் இந்த இன்னிங்ஸிலும் சொதப்பினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல், மயங்க் அகர்வால் உளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக, இந்திய அணியில் 6 பேர் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.


ரிஷப் பன்ட் மட்டுமே தனி ஒருவராக சிறப்பாக விளையாடி 100 ரன்களை விளாசி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் 198 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்து தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக பீட்டர்சன் 82 ரன்களும், வாண்டர் டசன் 41 ரன்களும் எடுத்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தென்னாப்பிரிக்கா அணியின் பீட்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\


ALSO READ | IPL2022: தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு இதுதான்..!


போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி பேட்டிங் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் கடந்த காலங்களில் இந்திய அணிக்கு சிறப்பாக பங்களித்திருப்பதாகவும், ஆனால் இனிவரும் காலங்களில் அவர்களுக்கான இடம் குறித்து பேசுவது மிகவும் கடினம் எனக் குறிப்பிட்டார். இது குறித்து தேர்வுகுழுவினருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR