ஐபிஎல் 2022 தொடரில் மும்பை அணியின் ஆசிர்வாதத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. மும்பை அணி தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியதால், இந்த வாய்ப்பு பெங்களுருக்கு கிடைத்தது. டெல்லி அணி ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அந்த அணி பிளே ஆஃப் சென்றிருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு டெல்லிக்கு கிடைக்கவில்லை. காரணம், மும்பை அணியை ஒருமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல விடாமல் வீழ்த்தி வெளியேற்றி இருந்தது டெல்லி அணி.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டெஸ்ட் அணியில் 2வது முறையாக நீக்கம் - முடிவுக்கு வரும் இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை


அதற்கு பழிவாங்க காத்துக் கொண்டிருந்த மும்பை அணிக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை வாய்ப்பு கிடைத்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்குமா என்ன?. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது.தாங்கள் அனுபவித்த வலி மற்றும் வேதனையை அப்படியே டெல்லிக்கு திருப்பிக் கொடுத்தது. 8 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருந்தது. ஆனால், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று கனவை தகர்த்தது.



இதேபோல், சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பிளே ஆஃப் கனவில் டெல்லி இருந்தது. ஆனால், இந்தமுறை தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடாத மும்பை அணி, டெல்லிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அந்த அணியின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது. இது பெங்களூரு அணிக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இப்போட்டியை லைவாக கண்டுகளித்த பெங்களுரு வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே டூபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் மும்பை ஜெர்சியில் அந்த அணிக்கு வாழ்த்துகளை அனுப்பி வைத்தனர். 



அவர்களின் வாழ்த்தால் சிறப்பாக விளையாடி மும்பை அணி  வெற்றியும் பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு துள்ளிக் குதித்த ஆர்சிபி அணியினர் தங்களின் நன்றியை மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரத்தில் கோலி, ரோகித் சர்மாவுக்கு நன்றி தெரிவித்த பழைய டிவிட்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. பிறந்தாளுக்கு வாழ்த்திய ரோக்கித்துக்கு கோலி  2019 ஆம் ஆண்டு நன்றி தெரிவித்திருந்தார். அந்த நன்றியை இப்போது ஸ்கிரீன் ஷாட் அடித்து நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் வீரரின் காதலியா இவர்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR