`தேசத்தின் அடையாளம்` என தோனியை புகழ்ந்த பிரதமர் மோடி.. நன்றிக்கூறிய தல MSD
பிரதமர் மோடியின் கடிதம் குறித்து `நன்றி` தெரிவித்த தோனி, அந்த கடிதத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புது டெல்லி: ஒரு சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியவர் தோனி. அவரின் ஓய்வு முடிவு 130 கோடி இந்திய மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ஓய்வு முடிவு என்னையும் ஏமாற்றம் அடையச்செய்தது. 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர் என பிரதமர் மோடி (PM Narendra Modi) அவர்கள், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடியின் கடிதம் குறித்து "நன்றி" தெரிவித்த தோனி (Mahendra Singh Dhoni), அந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "ஒரு கலைஞர், சிப்பாய் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அவர்கள் விரும்புவது பாராட்டு, அதேநேரத்தில் அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் அனைவராலும் கவனிக்கப்படுவதும் மிகப்பெரிய பாராட்டுக்கு சமாமாகும். நன்றி பிரதமர் மோடி எனக்கூறியுள்ளார்.
ALSO READ | நடிகர் சிவகார்த்திகேயனை எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிடுவதற்கான காரணம் தெரியுமா?