உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்ரல் 15ம் தேதியில் அறிவிக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. 


போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30ம் தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. 


இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 5ம் தேதி நடைபெறுகிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.