புஜாரா வீட்டிற்கு வந்த குட்டி தேவதை - யார் தெரியுமா!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் புஜாரா-விற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் புஜாரா-விற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் புஜாரா மற்றும் அவரது மனைவி பூஜா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 30 வயதாகும் புஜாரா தற்போது விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் சௌராஸ்டார அணிக்காக விளையாடி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியினை அவர் தனது ட்விட்டர் பக்க செய்திமூலம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், விரைவில் எங்கள் வீட்டு சந்தோசத்தினை வரவேற்க காத்திருக்கின்றோம் என அவரத ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்!