மரண தண்டனை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர்! காதலில் ஏமாந்தவர்
கிரிக்கெட் வரலாற்றில் மரண தண்டனை பெற்ற ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இருக்கிறார். யார் அவர் என தெரியுமா?
கிரிக்கெட் வரலாற்றில் பல அரிய சாதனைகள் படைத்த வீரர்களையும், அவர்களின் சாதனைகளின் பட்டியலையும் கேள்விப்பட்டிருப்போம். அதேநேரத்தில் சில விசித்திரமான சாதனைகளுக்கு சொந்மான வீரர்களும் உள்ளனர். கிரிக்கெட் களத்துக்கு உள்ளேவும், வெளியேவும் அப்படியான சாதனைகளைக் கொண்ட வீரர்கள் பலர் இருக்கும் நிலையில் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவரைப் பற்றி நீங்கள் இதுவரை கேள்விபட்டதுண்டா?.
மேலும் படிக்க | பீல்டரை மாற்றினால் 5 ரன்கள்! கிரிக்கெட்டில் புதிய விதிகளை கொண்டுவந்துள்ள MCC!
யார் அவர்?
லெஸ்ஸி ஹில்டன். ஜமைக்காவைச் சேர்ந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இடம்பிடித்திருந்தார். 1955 ஆம் ஆண்டு, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டார். இந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பிரச்சனை என்ன?
லெஸ்லி ஹில்டன், ரோஸ் என்ற பெண்ணை திருமணம் செய்தார். 12 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற அவர்களின் திருமண வாழ்க்கை திடீரென தடம் மாறியது. மனைவி ரோஸ் நியூயார்க்கைச் சேர்ந்த பிரான்சிஸ் ப்ரூக் என்பவருக்கும் இடையே தவறான உறவு மலர்ந்தது. இதனைக் கேள்விப்பட்டு கோபத்தின் உச்சத்துக்கு சென்ற லெஸ்ஸி, மனைவி ரோஸை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். சுமார் 7 குண்டுகள் ரோஸின் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
கிரிக்கெட் வாழ்க்கை
லெஸ்லி ஹில்டன் 1935 முதல் 1939 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 1935 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 6 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அவர், 12 இன்னிங்ஸில் மொத்தம் 16 விக்கெட்டுகளை எடுத்தார். 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது அவரின் சிறந்த பந்துவீச்சாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR