இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று கடைசி டி 20 ஆட்டத்தில் ஹராரே மைதானத்தில் மோதுகின்றன. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால் இன்றைய ஆட்டம்  தொடர் வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென் நெட்வொர்க் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


ஒருநாள் போட்டித் தொடரில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி. அதன் பிறகுடி நடைபெற்ற டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று  இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.


இதற்கு பதிலடியாக இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 99 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை செய்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.


இந்தியா அணி: லோகேஷ் , மன்தீப்சிங், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி (கேப்டன்), அக்ஷர் பட்டேல், தவால் குல்கர்னி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, பரிந்தர் ஸ்ரன்.


ஜிம்பாப்வே அணி: ஹாமில்டன் மசகட்சா, சிபாபா, பீட்டர் மூர், சிகந்தர் ராசா, மால்கம் வாலர், சிகும்புரா, முதோம்போட்ஸி அல்லது மருமா, கிரீமர் (கேப்டன்), மாட்ஸிவா, முஜாரபானி, திரிபனோ.