தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தால் இந்திய அணி 20 ஓவர் தொடரை இழந்திருக்க நேரிடும். ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் கொடுத்த அட்வைஸ் காரணம் என சாஹல் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முடிந்தது ஐபிஎல் ஏலம்.. ஒளிபரப்பு உரிமையை வாங்கிய புதிய நிறுவனம்!


டிராவிட் அறிவுரை


3வது 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் யுஸ்வேந்திர சாஹல். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர்,  மிடில் ஆர்டரில் அந்த அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. யுஸ்வேந்திர சாஹலின் சிறப்பான பந்துவீச்சுக்கு டிராவிட் கொடுத்த ஆலோசனை தான் முக்கிய காரணம் என இப்போது தெரியவந்துள்ளது. 


மேலும் படிக்க | ஐபிஎல் 2023; மீண்டும் வருகிறதா சாம்பியன்ஸ் லீக்? ஜெய்ஷா சூசகம்


சாஹல் பேட்டி 


இந்தப் போட்டியில்  4 ஓவர்கள் வீசிய யுஸ்வேந்திர சாஹல், 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயிற்சியாளர் டிராவிட் கொடுத்த ஆலோசனை பெரிதும் உதவியதாக குறிப்பிட்டார். அவர் என்னுடைய பலத்தில் பந்துவீச அறிவுறுத்தினார். அதன்படி பந்துவீசினேன். கடந்த போட்டிகளில் என்னுடைய பந்துவீச்சு சரியாக அமையாததால், இந்தமுறை என்னுடைய லைனை மாற்றி அமைத்தேன். இது எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. பந்தின் வேகத்தை குறைத்து ஸ்பின் செய்வதில் கவனம் செலுத்தியது எனக்கு உதவியாக இருந்தது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR