புதுடெல்லி: கி.மு 708 இல் மல்யுத்தம் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக இருந்து 1896 முதல் நவீன விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நவீன விளையாட்டுகளில், மல்யுத்தம் முதன்முதலில் கிரேக்க-ரோமன் மல்யுத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1896 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் இடம் பெற்றுள்ளது. 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடை ஃப்ரீஸ்டைல்  பிரிவில் வெண்கலப் பதக்கத்தைவென்றார் KD Jadhav. அதன் பின்னர் இந்தியா மல்யுத்த விளையாட்டின் மூலம் ஐந்து ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துக் கொள்கின்றனர்.


ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (Sakshi Malik). 2016 ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 58 கிலோ பிரிவில் வெண்கல பதக்கத்தை சாக்ஷி மாலிக் வென்றார்.   2016ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி அவர் சிறப்பு செய்யப்பட்டார். 


Also Read | Gareth Southgate on Euro 2020: உத்வேகத்தால் முன்னேறும் இங்கிலாந்து அணி


இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் மூன்றாவது ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் யோகேஸ்வர் தத். 2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.


மல்யுத்தத்தில் இந்தியாவின் மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற யோகேஸ்வர் தத் (Yogeshwar Dutt) வென்றார். ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 60 கிலோ பிரிவில் யோகேஸ்வர் வெண்கலம் வென்றார், பின்னர் 2013 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.   


கே.டி.ஜாதவ் இந்தியாவின் முதல் மல்யுத்த ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார்
சுதந்திர இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் மற்றும் விளையாட்டு வீரர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ் (Khashabha Dadasaheb Jadhav) ஆவார். ஜாதவ் 1952 ஹெல்சின்கி விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.    


சக மல்யுத்த வீரரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார், 2008 மற்றும் 2012 விளையாட்டுகளில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.


Also Read | IPL 15: ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR